செவ்வாய், 1 அக்டோபர், 2019

சிறுவர்தின நிகழ்ச்சி   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் சர்வதேச சிறுவர்தின நிகழ்ச்சியை 01.10.2019 அன்று வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்தது. வித்தியாலய அதிபர் இரா.சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக பாடசாலை அபிவித்திச் சங்க உறுப்பினர் திரு அ.அருணாசலம் அவர்களும்; முன்னைநாள் ஆசிரியராகிய திருமதி பிறேமாவதி அமிர்தராசா அவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரைகளும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

    நிகழ்வுக்கான அனுசரணையை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கம், திரு அ.அருணாசலம், திருமதி சடாட்சரம் வனிதா, முன்னாள் ஆங்கில ஆசிரியர் திரு ராஜசங்கர், திரு பா. ஜெயச்சந்திரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக