புதன், 29 மார்ச், 2017

2016 க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.


2016 க.பொ.த (சா/த) பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 26 மார்ச், 2017

மகிழ் பகிர் விழாவித்தியாலய ஆசிரியர் சு.குணேஸ்வரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொண்டமையினையிட்டு வித்தியாலய சமூகத்தினால் பாராட்டு விழா ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
 மேற்படி விழா 17.03.2017 அன்று வித்தியாலய மண்டபத்தில் ஆசிரியர் நலன்புரிச் சங்கத் தலைவரும் பிரதி அதிபருமாகிய திரு யோ. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகின்றோம்.
ஒளிப்படங்கள் : சு.சிவனேஸ்வரன்
செவ்வாய், 14 மார்ச், 2017

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அணி, வடமராட்சி வலய மட்ட கரப்பந்தாட்டம் 4 பிரிவுப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொண்டது.


வலய மட்ட கரப்பந்தாட்டம் 4 பிரிவுப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தை யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அணியினர் பெற்றுக்கொண்டனர்.

வடமராட்சி வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டிகளில் 16 வயது, 18 வயது, 20 வயது ஆண்கள்  பிரிவினர் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டனர். அதேவேளை ஆண்களுக்கான கடற்கரைப் பந்தாட்டத்திலும் சம்பியனாகியது. பெண்களுக்கான கடற்கரைப் பந்தாட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.  போட்டிகளில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கும் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.