வியாழன், 8 பிப்ரவரி, 2018

வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வல்லுநர் போட்டி 2018.02.07 புதன்கிழமை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக வித்தியாலயத்தின் பழைய மாணவர், பொறியியலாளர் திரு க. முருகமூர்த்தி (Director,Step Ahead (pvt) Ltd, Colombo)அவர்கள் கலந்து சிறப்பித்தார். பரிசில்களை டாக்டர் திருமதி பத்மரஞ்சனி முருகமூர்த்தி (Teaching Hospital Kalubowila) அவர்கள் வழங்கிக் கௌரவித்தார். இந்த வருடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை இராஜரட்ணம் இல்லம்(பச்சை) பெற்றுக்கொண்டது. பாடசாலைச் சமூகம் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தது.

நிகழ்வில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்கள்