ஞாயிறு, 1 டிசம்பர், 2013

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் – சேவைநயப்பு நிகழ்வு 2013
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பித்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவம் 30.11.2013 சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தலைவர் ஆசிரியர் தெ. சுகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உரை நிகழ்த்தினர். மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாலையிட்டு வரவேற்று நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர். நிகழ்வில் இருந்து சில படங்களை தருகிறோம்.

படமும் பதிவும் – சு. குணேஸ்வரன் (வித்தியாலய ஆசிரியர்)