சனி, 30 ஜனவரி, 2021

சரஸ்வதி சிலை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டுதல்

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில்  சரஸ்வதி சிலை நிறுவுவதற்கான அடிக்கல் அண்மையில் (28.01.2021) நாட்டப்பட்டது. தொண்டைமானாறு இளைஞர் நற்பணி மன்றத்தினர் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வித்தியாலய அதிபர், இரா சிறீநடராசா மற்றும் ஆசிரியர்கள் உட்பட பாடசாலைச் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.











வித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு

 


யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் (55) அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தொண்டைமானாற்றைச் சேர்ந்த அமரர். இரத்தினலிங்கம் கிருஷ்ணதாஸ் (யாழ்ப்பாணம் சாந்தா மோட்டேர்ஸ் உரிமையாளர்) அவர்களின் ஞாபகார்த்த அன்பளிப்பாக  இந்து அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக அன்னாரின் குடும்பத்தினர் மாணவர்களின் வாசிப்புக்குக்கு ஏற்ற நூல்களை மேற்படி நூலகத்திற்கு வழங்கினர். அன்னாரின் குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.





வியாழன், 21 ஜனவரி, 2021

"தொகைமதிப்பு ஓவியர் போட்டி"யில் பரிசில் பெற்ற செ. யோகீசனுக்கு வாழ்த்துக்கள்.



யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் செ. யோகீசன் (இடைநிலைப் பிரிவு) குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு ஓவியப் போட்டியில் பாராட்டுச் சான்றிதழும் ஊக்குவிப்புப் பணப்பரிசிலும் பெற்றுள்ளார். இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 போட்டியாளர்களில் 9 ஆவது இடத்தை மேற்படி மாணவன் பெற்றுள்ளார். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மாணவனை நெறிப்படுத்திய சித்திர ஆசிரியர் தெ. சுகுமார் அவர்களுக்கும் போட்டியில் வெற்றிபெற்ற செல்வன் செ. யோகீசனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இது தொடர்பாக குறித்த திணைக்களத்தினரின் சமூகவலைப் பதிவினையும் இங்கு இணைத்துள்ளோம்.

குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு-2021 -

"தொகைமதிப்பு ஓவியர்" சித்திரப்போட்டி சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு.

இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள

குடிசனம் மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2021 தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்திட்டத்திற்கமைய "தொகைமதிப்பு ஓவியர்".எனும் கருப்பொருளில் தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தினால் தேசிய ரீதியாக சகல பாடசாலை மாணவர்களுக்குமான கனிஷ்ட மற்றும் மேற்பிரிவுகளில் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காக சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பா.பாலச்சந்திரன் தலைமையில் (19.01.2021 )இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் காசோலைகளை மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் திணைக்கள மக்களியல் பிரிவின் புள்ளிவிபரவியலாளர்

சி. ஜெயவிந்தன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கலந்துகொண்டனர்.








கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த  தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு அண்மையில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்குரிய அன்பளிப்பை எழுத்தாளர் ரவி (சுவிஸ்) அவர்கள் வழங்கியுள்ளார். எழுத்தாளர் அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.





திங்கள், 18 ஜனவரி, 2021

தமிழ்ப் பாடத்திற்கான வழிகாட்டல் கருத்தரங்கு

         யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 11 (பரீட்சைக்குத் தோற்றும்) மாணவர்களுக்கான  கருத்தரங்கு 15.01.2021 அன்று வித்தியாலயத்தில் இடம்பெற்றது. தமிழ்ப்பாட ஆசிரியர்களாகிய திரு சு. குணேஸ்வரன், திரு சி. சிவனேஸ்வரன், திருமதி பத்மாவதி குழந்தைவேல் ஆகியோர் மேற்படி வழிகாட்டல் கருத்தரங்கினை நிகழ்த்தினர். தொடக்கவுரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் நிகழ்த்தி நெறிப்படுத்தியிருந்தார்.






வெள்ளி, 15 ஜனவரி, 2021

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (13.01.2021) வழங்கப்பட்டன. “லஷ்மிசோதி நம்பிக்கை நிதியத்தின்” திரு சுகுமார் சிவசோதித்துரை மேற்படி அன்பளிப்பை வழங்கியுள்ளார். நிகழ்வில் இந்து அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி மதியழகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இந்த அன்பளிப்புக்களை வழங்கி வைத்தார். மேற்படி நிதியத்தினருக்கு பாடசாலைச் சமூகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.