செவ்வாய், 23 ஜனவரி, 2018

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரம்தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கவாரம் கடந்த 12.01.2018 அன்று யா தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் தேசியப் பிரகடனம், மாணவர்களின் பேச்சு, சிறப்பு அழைப்பாளர்களின் உரை ஆகியன இடம்பெற்றன.


தரம் 1 மாணவர் வரவேற்பு -2018


ஒளிப்படங்கள்


கலை கலாசார இலக்கிய மன்றத்தின் நாடகப்போட்டியில் ...வல்வை கலை கலாசார இலக்கிய மன்றம் அண்மையில் நடாத்திய நாடகப்போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் நாடகம் முதலாம் பரிசினைப் பெற்றுக்கொண்டது. அந்நாடகத்தில் இருந்து சில ஒளிப்படங்கள்.படங்கள் நன்றி : வல்லை கலை கலாசார இலக்கிய மன்றம். 

வெள்ளி, 12 ஜனவரி, 2018

லக்ஷ்மிசோதி நிதியத்தினரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு    யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களில் ஒருதொகுதியிருக்கு (35மாணவர்கள்) 'லக்ஷ்மிசோதி' நிதியத்தினரின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு சி. சுகுமார் அவர்கள் கடந்த வருடமும் மாணவர்களுக்கான உதவியை வழங்கியிருந்தார்.

      வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு நிதியத்தின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பிரதிஅதிபர் திருமதி ஆனந்தி சிவகுமாரன் அவர்கள் கலந்துகொண்டார். நிகழ்வில் தொண்டைமானாறு அறநெறிப்பாடசாலைப் பொறுப்பாசிரியர் திருமதி மதியழகன் தமிழ்ச்செல்வி, வடமராட்சி வலய தமிழ்ப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோகர் திருமதி வளர்மதி அம்பிகைபாகன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கிவைத்தனர்.