வியாழன், 18 மே, 2017

கல்விச் சுற்றுலா - 2017
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா அண்மையில் இடம்பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆந் திகதிமுதல் 20ஆந் திகதிவரை ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுற்றுலாவில் மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய சுற்றுலாத்தலங்கள் பார்வையிடப்பட்டன. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகின்றோம்.


செவ்வாய், 16 மே, 2017

விழிப்புணர்வுச் செயற்பாடு
சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் தரம் 6,7 மாணவர்களுக்கான விழிப்புணர்வூட்டல் செயற்பாடு அண்மையில் 08.05.2017 இல் யா தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலத்தில் இடம்பெற்றது.


படங்கள் : நவரத்தினம் துவாரகன் (ஆசிரியர்)

பணிநயப்பு விழா 2017
உயர்திரு கு. குகானந்தன் ஆசிரியர் அவர்களுக்கு வித்தியாலய சமூகத்தின் ஏற்பாட்டில் பணிநயப்பு விழா 05.04.2017 அன்று மிகச்சிறப்பாக வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வின்போதான ஒளிப்படங்களைத் தருகின்றோம்.
பதிவேற்றம் : சு.குணேஸ்வரன்(ஆசிரியர்)