ஞாயிறு, 1 டிசம்பர், 2013

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் – சேவைநயப்பு நிகழ்வு 2013
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பித்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவம் 30.11.2013 சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தலைவர் ஆசிரியர் தெ. சுகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஆசிரியர்களின் சேவையைப் பாராட்டி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உரை நிகழ்த்தினர். மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு மாலையிட்டு வரவேற்று நினைவுப் பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர். நிகழ்வில் இருந்து சில படங்களை தருகிறோம்.

படமும் பதிவும் – சு. குணேஸ்வரன் (வித்தியாலய ஆசிரியர்)

திங்கள், 14 அக்டோபர், 2013

வாணி விழா 2013தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வாணிவிழா நிகழ்வு 14.10.2013 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலயத்தின் இந்துமாமன்றத் தலைவர் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் நவராத்திரி தினத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு இடம்பெற்றது. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள். 
 

வெள்ளி, 12 ஜூலை, 2013

உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

எமது வித்தியாலய உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல் 29.06.2013 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாடசாலையின் பழைய மாணவரும் தற்போது இலங்கைப் பொலிஸ் சேவை உத்தியோகத்தருமான முத்துலிங்கம் உதயானந்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.

சிறிய மாணவர்களின் களப்பயணம்
சிறிய மாணவர்களின் களப்பயணம் யூலை 2013 - தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்
   சிறிய மாணவர்களின் களப்பயணம்

வெள்ளி, 29 மார்ச், 2013

வடமாகாண இலக்கிய விழா பண்பாட்டு ஊர்வலத்தில்
வடமாகாண இலக்கிய விழாவின் இறுதி நிகழ்வு (2013) யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றவேளை வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் "சுளகு நடனம்" "பெரியார்கள்" ஆகிய பண்பாட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். அதன்போதான சில ஒளிப்படங்கள்

ஒளிப்படம் - சு. குணேஸ்வரன் (ஆசிரியர்)