செவ்வாய், 15 அக்டோபர், 2019

சர்வதேச எழுத்தறிவு தினம்


    யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் 03.10.2019 அன்று வித்தியாலய மண்டபத்தில் நூலக ஆசிரியர் திருமதி செ. கெனடி தலைமையில் இடம்பெற்றது.

    முன்னதாக 30.09.2019 அன்று சர்வதேச எழுத்தறிவு தினம் தொடர்பான பதாகை பாடசலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 1966 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் செப்டெம்பர் மாதம் 08 ஆந் திகதி சர்வதேச எழுத்தறிவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. நிகழ்வில் செல்விகள் சிறீ. லக்சாயினி, செ. மிதுசாளினி ஆகியோர் எழுத்தறிவு தினம் தொடர்பான துண்டுப் பிரசுரத்தின் தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். தொடர்ந்து கலாநிதி சு. குணேஸ்வரன் தமிழின் தொன்மை தொடர்பாகவும் அதன் அண்மைய இரண்டு தகவல்களாக கீழடி மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்கப்படும் தமிழ் இருக்கை தொடர்பாகவும் எடுத்துரைத்து தமிழின் முக்கியத்துவம் பற்றியும் அந்தத் தமிழ்மொழியை பிழையின்றிக் கற்க மாணவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பிரதி அதிபர் திரு நா. ரவீந்திரன் மாணவர்களின் எழுத்தறிவு தொடர்பாக உரை நிகழ்த்தினார். திருமதி செ. கெனடியின் நன்றி தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக