சனி, 13 ஏப்ரல், 2019

கிழக்கு மாகாணத்துக்கு ஒரு கல்விச்சுற்றுலா -2019



  யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர மாணவர்களின் ஒரு தொகுதியினர் இந்தச் சுற்றுலாவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அமைந்துள்ள தொன்மையான மரபுரிமைச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற இடங்கள், வணக்கத் தலங்கள், தொழிற்சாலைகள், இயற்கை அமைவிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக மேற்படி சுற்றுலா அமைந்திருந்தது.

  புல்மோட்டை இல்மனைற் தொழிற்சாலை, நிலாவெளி கடற்கரை, சிறீ லட்சுமி நாராயணன் கோவில், சல்லி சிறீ முத்துமாரிஅம்மன் ஆலயம், கந்தளாய் சீனித்தொழிற்சாலை, கந்தளாய் நீர்த்தேக்கம், நீர் சுத்திகரிப்பு மையம், கோணேசர் கோவில், திருகோணமலை இயற்கைத் துறைமுகம், கன்னியாய் வெந்நீர் ஊற்று, கொக்கட்டிச்சோலை சிறீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம், மாமாங்கப் பிள்ளையார் கோவில், சுவாமி விபுலாநந்தர் சமாதி, விபுலாநந்தர் ஞாபகார்த்த மண்டபம், விபுலாநந்தா ஞாபகார்த்த பணிமன்றம், ராமகிருஸ்ண மிசன் காரைதீவு சாரதா மகளிர் இல்லம், பேச்சி அம்மன் கோவில், புன்னைச்சோலை சிறீ பத்திரகாளியம்மன், காமாட்சி அம்மன் கோவில், களுதாவளை பிள்ளையார் கோவில், சிறீ சப்தரிஷி வளாகம் (காயத்திரி கோவில்), இராமகிருஸ்ண மிசன், காந்தி பூங்கா, ஒல்லாந்தர் கோட்டை, அம்பாறை ஹின்குரான சீனித் தொழிற்சாலை, இங்கினியாகல நீர்மின் உற்பத்தி நிலையம், சேனநாயக்க சமுத்திரம் முதலான இடங்களைப் பார்வையிட்டனர்.

படங்கள் : சுற்றுலாக்குழுவினர்