வெள்ளி, 31 அக்டோபர், 2014

"உப்புமால்" சிறுகதைத்தொகுப்பு"உப்புமால்" சிறுகதைத்தொகுப்பு
06.11.2014 வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயம் வெளியிடும் புதிய சிறுகதைத்தொகுப்பு நூலின் அட்டைப்படம்

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அரச சிறுவர் நாடக விழாவில் 7 விருதுகளைப் பெற்ற தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச நாடக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2014 அரச சிறுவர் நாடக விழா 2014 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பு -07 இல் அமைந்துள்ள நவ ரங்கல மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்ற மேற்படி நாடகவிழாவில், தமிழ்மொழிப் பிரிவில் எமது வித்தியாலயத்தில் இருந்து ‘நரிமேளம்’ என்ற நாடகம் செப். 18 ஆந்திகதி நிகழ்த்தப்பட்டது. எமது வித்தியாலய ஆசிரியர் து. ராமதாஸ் அவர்களின் எழுத்துரு மற்றும் நெறியாள்கையில் இடம்பெற்ற இச்சிறுவர் நாடகத்திற்காக விருதுகள் வழங்கும் நிகழ்வு 20.10.2014 அன்று மகரகமவில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்ற கலையரங்கில் இடம்பெற்றது.

மேற்படி நாடகம் பின்வரும் 7 பிரிவுகளில் விருதினையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டது.

1. சிறந்த நாடகம் முதலாம் இடத்திற்கான விருது
2. சிறந்த நெறியாள்கைக்கான விருது – து. ராமதாஸ்
3. சிறந்த எழுத்துப்பிரதிக்கான விருது – து. ராமதாஸ்
4. சிறந்த மேடை நிர்வாகத்திற்கான விருது – து. ராமதாஸ்
5. சிறந்த ஒப்பனைக்கான விருது – து. ராமதாஸ்
6. சிறந்த சிறுவர் நடிகருக்கான விருது – செல்வன் சுதாகர சுபாஸ்
7. சிறந்த துணைநடிகருக்கான விருது – செல்வன் வி. லதுர்சன்

மேற்படி நாடகத்தை நெறியாள்கை செய்து மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர் து. ராமதாஸ் அவர்களையும், நாடகத்தில் நடித்த மாணவர்கள் எஸ். சுபாஸ். வி. லதுர்சன், எஸ். வினுஜா, எஸ் அஞ்சனன், ரி.மிதுராஜ், , சு. சுபாஜினி, பி. கிருஷாந், பி.பானுப்பிரியா, ஆர். துனேகா, ஜெ. ஜெயராசா, வி. லதுர்சன், என். திவ்வியா, ரி. தேனுஜா, ஆர். தாரண்யா, பி. சாதுரியா, கே. புவிதா, கே. மதுசனா ஆகியோரையும் துணைநின்ற பக்கவாத்தியக் கலைஞர்களான செல்வன் பிரதாபன், திரு சேதுராஜ் ஆகியோரையும் பின்னணி பாடல் பாடிய மாணவர்கள் செல்விகள் எஸ். றெபேக்கா, வி. வினோதா, ஜெ. சங்கீதா, பி.நிலாஜினி ஆகியோரையும் மற்றும் பல்வேறு விதத்திலும் உதவிய வித்தியாலய ஆசிரியர்கள் திரு சசிகரன், திரு ரகுபதி, செல்வி ராதை வன்னிமரம், செல்வி சிந்துஜாஆகியோரையும் எல்லாவற்றும் துணையாக நின்று வழிப்படுத்திய வித்தியாலய அதிபர் திரு இ. சிறீநடராஜா அவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.வெள்ளி, 24 அக்டோபர், 2014

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வாழ்த்துகின்றோம்.
2014 ஆம் ஆண்டு தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலிருந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றி இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். செல்வி சுதாகரன் வினுஜா 180 புள்ளிகளையும், செல்வி சுசீந்திரசிங்கம் சுபாஜினி 175 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களோடு எமது வித்தியாலயத்திலிருந்து தோற்றிய மாணவர்களில் 24 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்துள்ளனர்.

எமது மாணவர்களையும் இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திரு இ. சசிகரன், திருமதி சிவபாஸ்கரன் சிவகௌரி அவர்களையும் பாடசாலைச் சமூகம் வாழ்த்தி மகிழ்கின்றது.


அதிபர், பிரதி அதிபர், வகுப்பாசிரியர்களுடன் 
சித்தியடைந்த மாணவர்கள். 

 செல்வி சுசீந்திரசிங்கம் சுபாஜினி,  செல்வி சுதாகரன் வினுஜா 


வகுப்பாசிரியர்கள் திருமதி சிவபாஸ்கரன் சிவகௌரி,
திரு இ. சசிகரன் ஆகியோருடன் மாணவர்கள். 

வெள்ளி, 10 அக்டோபர், 2014

கணனி அன்பளிப்பு
வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்களில் ஒருவராகிய அமரர் மயில்வாகனம் ராசேந்திரன் (1941-1967)அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது மகள் திருமதி சத்தியதேவி துரைராஜலிங்கம், பேத்தி திருமதி தங்கலதா மகேந்திரன், பூட்டி செல்வி தாரணி மகேந்திரன் ஆகியோரின் அன்பளிப்பாக வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி கணனி அன்பளிப்பு செய்யப்பட்டது. அவரது குடும்பத்தினர் சார்பாக திரு திருமதி நாகேந்திரம்ஐயர் ஜெயதேவி ஆகியோர் பாடசாலைக்கு வருகைதந்து  01.10.2014 அன்று  வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா அவர்களிடம் கணனித்தொகுதியை வழங்கி வைத்தனர். மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள் ...


வியாழன், 9 அக்டோபர், 2014

ஆசிரியர் தினம்


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் ஆசிரியர் தினம் 07.10.2014 அன்று மாணவ முதல்வன் ஜெ. ஜென்சன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் திரு கா. யோகராசா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். மாணவர்களினதும் ஆசிரியர்களதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

சனி, 4 அக்டோபர், 2014

வாணிவிழா 2014தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலம் இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் வாணி விழா நிகழ்வுகள் 03.10.2014 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விஜயதசமி பூஜை நிகழ்வுகளுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வாணிவிழாவையொட்டி பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கோலம் அமைத்தல், மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல், பண்ணிசை ஆகிய போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேற்படி நிகழ்வு இந்துமாமன்றத் தலைவர் திரு சு. குணேஸ்வரன் தலையில் இடம்பெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை மாணவி கு. தாட்சாயினியும் வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்களும் சிறப்புரையை இ. உதயசங்கர் ஆசிரியர் அவர்களும் நிகழ்த்தினர். நன்றியுரையை மாணவி இ. அஜத்திகா நிகழ்த்தினார்.

மேற்படி வாணிவிழா போட்டிகளுக்கான பரிசில்களுக்கான அன்பளிப்பை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது சுவிஸில் வசிப்பவருமாகிய திரு கனகரத்தினம் உதயராஜ் அவர்கள் வழங்கியிருந்தார்.

ஆரம்பக்கல்வி மாணவர்களின் ஒரு தொகுதிப் பரிசில்களுக்கான அன்பளிப்பை வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கமும் வழங்கியிருந்தது.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளான கவிதை, பாடல், நடனம், நாடகம், விவாத அரங்கு ஆகியன இடம்பெற்றன.


மங்கள விளக்கேற்றல்


அதிபர் வாழ்த்துரை
  
லைமையுரை

சிறப்புரை 
மாணவர் கலை நிகழ்வுகள் 

சிறுவர்கள் நிகழ்த்திய பட்டிமன்றம்

 நாடகம் பரிசில் வழங்குதல் நன்றியுரை

பாடசாலைக்கீதம்