வெள்ளி, 11 அக்டோபர், 2019

தேசியத்தில் பதக்கம் பெற்ற சுதாகரன் சுபாஸ் – பாராட்டு விழா


   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சுதாகரன் சுபாஸ் தமிழ்மொழித்தின தனிநடிப்புப் போட்டியில் தேசியத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தமைக்கான பாராட்டு விழா வித்தியாலயத்தில் 11.10.2019 வெள்ளி காலை இடம்பெற்றது.

   சுதாகரன் சுபாஸ் வடமாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் முதல்நிலை பெற்று 13.09.2019 கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தார். மாணவனை வித்தியாலய நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியர் திருமதி துகாரதி ஞானச்சந்திரன் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.

   வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் வடமராட்சி வலய தமிழ்ப்பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ச. பத்மகாந்தன், ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி வளர்மதி அம்பிகைபாகன், திரு து. ராமதாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினர். வித்தியாலய பிரதி அதிபர் நா. ரவீந்திரன், ஆசிரியர் சு. குணேஸ்வரன், த. குமார் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், தொண்டைமானாறு கல்வி மேம்பாட்டுக் குழுவினர் மாணவனை வாழ்த்தி பாராட்டுச் சின்னங்களை வழங்கினர். நிகழ்வில் வரவேற்புரையை ஆசிரியர் வ. திருக்குமரனும் நன்றியுரையை திரு த. ரூபரஞ்சனும் நிகழ்த்தினர். நெறிப்படுத்திய ஆசிரியர் துவாரகி ஞானச்சந்திரன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். செல்வன் சுதாகரன் சுபாஸ் ஏற்புரை நிகழ்த்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக