செவ்வாய், 8 அக்டோபர், 2019

நவராத்திரிவிழா நிகழ்ச்சிகள் – 2019



     யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நவராத்திரிவிழா நிகழ்வுகள் 08.10.2019 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வித்தியாலய கலை அரங்கில் இந்துமாமன்றத் தலைவர், ஆசிரியர் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. பூசை நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏடு தொடக்குதல் நிகழ்வு இடம்பெற்றது. கலை நிகழ்வுகளின் ஆரம்பத்தில் வரவேற்புரையை ஆசிரியர் திருமதி சிவகௌரி சிவபாஸ்கரன் நிகழ்த்தினார். வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் நிகழ்த்தினார். நவராத்திரி விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

     பரிசில்களுக்கான அனுசரணையை திருமதி கனகரத்தினம் சுவந்திராதேவி (தொண்டைமானாறு) அவர்களும் வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கத்தினரும் வழங்கியிருந்தனர். பரிசில் வழங்கும் நிகழ்வினை திரு எஸ். முரளிதரன், திரு த. ரூபரஞ்சன், திரு வீ. வீரகுமார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சித் தொகுப்பினை திரு. தெ. சுகுமார், செல்வி ர. நக்சாளினி ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை இந்துமாமன்றச் செயலாளர் திரு மா. செல்வரட்ணம் நிகழ்த்தினார்.
பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்





























உதயன் 08.10.2019





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக