திங்கள், 28 டிசம்பர், 2020

சேவைநலன் பாராட்டு


   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் அண்மையில் சேவையிலிருந்து மாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கும் சுயவிருப்பில் ஓய்வுபெற்றுச் சென்ற திருமதி செல்வரஞ்சினி கெனடி அவர்களுக்குமான சேவைநலன் பாராட்டு நிகழ்ச்சி சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மிக எளிமையாக வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

          தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை ஆசிரியர் பணியாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் பிரதிஅதிபர் நா. ரவீந்திரன் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்ச்சியில் சேவையில் இருந்து மாற்றலாகிச் சென்ற திருமதி பாமினி ஜெயந்தன், திருமதி கமலினி கிருபாகரன், திரு சி. வசந்தகுமார், திருமதி சி. சிவபாஸ்கரன், செல்வி க. ரஜனி ஆகியோரையும்; சுயவிருப்பில் ஓய்வுபெற்றுச் சென்ற திருமதி செல்வரஞ்சினி கெனடி அவர்களையும் பாராட்டி; அதிபர், பிரதி அதிபர், மூத்த ஆசிரியர்கள் உரை நிகழ்த்தினர். நன்றியுரையை திரு வ. திருக்குமாரன் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.





























செவ்வாய், 22 டிசம்பர், 2020

சாதனையாளரை வாழ்த்துகின்றோம்


(யாழ். தினக்குரல் பத்திரிகை, 21.12.2020)

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் சாதனையாளரைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அனுசரணை : திரு நே. ஜெயக்குமார், (லண்டன் )
                              வித்தியாலய பழைய மாணவர். 

விளையாட்டு மைதான தேவைக்காக புல் வெட்டும் இயந்திரம் அன்பளிப்பு


     யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவர்களின் விளையாட்டு மைதானத்தின் தேவைக்காக புல் வெட்டும் இயந்திரம் (Grass Cutting Machine) ஒன்று அன்பளிப்புச் (22.12.2020) செய்யப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வி. சுரேஸ்குமார் (பாலேந்திரஐயர் மடம்) அவர்கள் மேற்படி இயந்திரத்தை மாணவர்களின் விளையாட்டு மைதானத் தேவையைக் கருத்திற் கொண்டு அன்பளிப்புச் செய்துள்ளார். 

பாடசாலைச் சமூகம் இந்நலச்சேவைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.






ஞாயிறு, 20 டிசம்பர், 2020

5 கணனித் தொகுதிகள் அன்பளிப்பு


   யா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் கணனிக் கல்வியை ஊக்குவிக்கும்வகையில் (AVR Trust) ஏவீஆர் அறக்கட்டளையின் ஊடாக 5 கணனித் தொகுதிகளை திரு திருமதி சிவகுமார் விசாலினி தம்பதியினர் வித்தியாலயத்திற்கு கையளித்தனர். 

    திருமதி சி.விசாலினி அவர்கள் வித்தியாலயத்தின் பழைய மாணவியும் டாக்டர் விசாகரத்தினம் (தொண்டைமானாறு) அவர்களின் புதல்வியும் ஆவார். 21.12.2020 அன்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இரா. சிறீநடராசா முன்னிலையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கணனிக் கல்விக்குப் பொறுப்பான இணை ஆசிரியர்  திரு செ. கணேசலிங்கம் அவர்கள் கணனிகளைப் பொறுப்பேற்றார். பிரதி அதிபர் த. இராஜசேகரன் அவர்கள் ஏவீஆர் அறக்கட்டளையின் சமூகப் பணிக்கு நன்றி தெரிவித்தார். 

   ஏவீஆர் அறக்கட்டளையின் இப்பணிக்கு பாடசாலைச் சமூகமும் நன்றி தெரிவிக்கின்றது. 










திங்கள், 14 டிசம்பர், 2020

மூன்று மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு


யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்களுக்கு அண்மையில் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி அன்பளிப்பை வல்வெட்டி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு மா. மச்சராசா குடும்பத்தினர் வழங்கியிருந்தனர். இவர்களுக்கு பாடசாலைச் சமூகத்தினர்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.




தமிழ்வலம் 16.12.2020

வியாழன், 10 டிசம்பர், 2020

செல்வச்சந்நிதி ஆலய கலாமன்றத்தினரின் விழிப்புணர்வுச் செயற்பாடு

 


தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கலாமன்றத்தினர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசுரங்களையும் பதாகைகளையும், ஒரு தொகுதி Hand Sanitizer களையும் அண்மையில் வித்தியாலய அதிபரிடம் வழங்கினர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய கலாமன்றத்தினருக்கு வித்தியாலயம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.




கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

   

தொண்டைமானாறு இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். கடந்த 25.11.2020 அன்று யா / தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும், தேவைப்பாடு உள்ள ஒரு தொகுதி மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்களிடம் கையளித்தனர். அவை பின்னர் மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தொண்டைமானாறு இளைஞர் இளைஞர் நற்பணி மன்றத்தினருக்கு வித்தியாலயம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு


தொண்டைமானாற்றைச் சேர்ந்த சண்முகராஜா வள்ளி அமிர்தராணி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினர் துவிச்சக்கர வண்டி ஒன்றினை யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பாடசாலை மாணவருக்கு அன்பளிப்பாக வழங்கி உதவியுள்ளனர். 

தரம் 5 இல் கல்வி கற்கும் செல்விகள் ச. லக்சிகா, ச.லின்சிகா ஆகிய சகோதரிகளுக்கு மேற்படி துவிச்சக்கரவண்டி கற்றல் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு வழங்கப்பட்டது. மேற்படி குடும்பத்தினருக்கு பாடசாலைச் சமூகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

திங்கள், 16 நவம்பர், 2020

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன்

 


யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் சசிதரன் பவநிதன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளைப் பெற்றுள்ளார். வடமராட்சி வலயத்தில் முதன்மைப் புள்ளிகளைப் பெற்ற மாணவனை வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் குழாத்தினர் நேரில் வருகை தந்து பாரட்டினர். 

மேற்படி பாடசாலையில் இருந்து தோற்றியோரில் செல்வன் உதயகுமார் வருணிஜன் 164 புள்ளிகளையும் செல்வன் மகேஸ்வரன் தேனுஸ்ராஜ் 163 புள்ளிகளையும் பெற்றனர். மேற்படி வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பரீட்சையில் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற ஏனைய மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியர்களையும் பாரட்டி வாழ்த்துகின்றோம்.

 தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்.




தமிழ்வலம் பத்திரிகையில் வெளிவந்த செய்தி