திங்கள், 21 அக்டோபர், 2019

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியனாகியது   சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் 90 ஆவது ஆண்டு விழாவினை முன்னிட்டு அழைக்கப்பட்ட 21 வயது பாடசாலை அணிகளுக்கு இடையிலான கரபந்தாட்ட போட்டியில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி சம்பியனாகியது.இதன் இறுதியாட்டம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணியை எதிர்த்து புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி மோதியது.

   முதல் இரண்டு செற்களிலும் ஆதிக்கம் செலுத்திய தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி 25:21, 28:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது செற்றில் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி அணி 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது செற்றில் இரு அணிகளும் தொடர்ந்து பலப்பரீட்சை நடாத்தினர். இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அணி 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 3:1 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர். மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய அணி 25:18, 27:25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக