செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி – 2019   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி 27.01.2019 ஞாயிற்றுக்கிழமை பி. ப 1.30 மணிக்கு வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 2019 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை சுப்பையா இல்லம் (சிவப்பு) பெற்றுக்கொண்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், அயற்பாடசாலைகளின் ஆசிரியர்கள் , கிராமமக்கள், நலன் விரும்பிகள் எனப் பெருந்திரளாகக் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியைச் சிறப்பித்தனர்.

போட்டி நிகழ்வுகளில் இருந்து ஒரு தொகுதி ஒளிப்படங்கள்
படங்கள் நன்றி : இன்பன், குணேஸ், தமிழ்ச்செல்வி