வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள் ரூபா ஐம்பதினாயிரம் பெறுமதியான ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார். மேற்படி நிகழ்வு 29.01.2016 காலை, வித்தியாலய பிரதான மண்டபத்தில் பிரதி அதிபர் ஆர். இராஜசேகரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் நூல்களை பிரதிஅதிபர் நூலக ஆசிரியர் மாணவ தலைவர்கள் இணைந்து எம்.கே சிவாஜிலிங்கம் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.