வியாழன், 29 மார்ச், 2018

சாதனை மாணவர்களை வாழ்த்துகின்றோம்.


க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சைப் பெறுபேறுகள் – 2017

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் குணநேசன் ரிஷிரேகா, பரமேஸ்வரன் மாதுஜா ஆகிய இருவரும் இவ்வருடம் 9A பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். அத்துடன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குணநேசன் ரிஷிரேகா - 9A
பரமேஸ்வரன் மாதுஜா - 9A
சச்சிதானந்தம் ஜேதுஷா - 6A,2B,C
தேவகுமார் டெரிக்கா -6A,2B,C
சிறீகாந்தன் லக்சாயினி -6A,B,C
விஜயகுமார் டினோஸ் -4A,2B,3C
ரவீந்திரன் நக்ஷாளினி -3A,6C
யோகதாஸ் அஜந்தராஜ் -3A,3B,2C,S
குமாரதாஸ் லவண்ஜா-2A,B,5C,S
பற்குணசிங்கம் டிலேக்கா -2A,B,4C,2S
மனோகரன் சியானி -2B,3C,4S
செல்வராசா மிதுசாளினி - A,3B,3C,S
காந்தரூபன் ஜீவிதா - A,3B,3C,S
அருணாசலம் ஆறுமுகவேல் - A,2B,4C,S
மனப்புலிசிங்கம் கிருஷாந்தி- A,2B,3C,2S
சசிகரன் இஷாந்திகா -3B,3C,2S
சண்முகநாதன் கிருஷாந்தன் - A,6C,S
நாகேந்திரம் நிதுஷா - B,5C,2S
வதனராசா சரண்ஜா -2A,4C,S
குமாரதாஸ் நிஷாந்தினி - A,B,3C,2S
செல்வச்சந்திரன் சோபிகா - A,B,2C,3S
அரிச்சந்திரன் சபேசன் -2B,4C,S
பற்குணசிங்கம் சுமித்திரா -3B,C,3S
கஜேந்திரன் யதுசன் -2B,C,3S
பிரபாகரன் சசிந்தன் - B,2C,3S

பாராட்டி வாழ்த்துகின்றோம்
தினக்குரல் 03.04.2018


செவ்வாய், 20 மார்ச், 2018

வலய மட்ட கரப்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது2018 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டம் 16 வயது, 18 வயது, 20 வயது ஆண்கள் பிரிவில் சம்பியன் கிண்ணத்தை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் பெற்றுக்கொண்டது.

அத்துடன் கடற்கரைக் கரப்பந்தாட்டத்தில் ஆண்கள் பிரிவு சம்பியன் கிண்ணத்தையும் பெண்கள் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
போட்டியில் பங்கேற்ற வீர வீராங்கனைகளுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பொறுப்பாசிரியருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சில ஒளிப்படங்கள்மாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகளுக்கு ஒலிபெருக்கி சாதனம் அன்பளிப்பு
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் வகுப்பறை மற்றும் குழுச்செயற்பாடுகளுக்கு உதவும்முகமாக புதிய ஒலிபெருக்கிச் சாதனம் ஒன்று அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டது. வித்தியாலய பழைய மாணவரும் பெற்றாருமாகிய திருமதி சிறீதரன் ஜெயராணி அவர்கள் மேற்படி சாதனத்தை அன்பளிப்பாக வழங்கி உதவினார்.


ஆரம்பப் பிரிவு கற்றல்வள நிலையம் திறப்புவிழாயா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் ஆரம்பப்பிரிவு கற்றல் வளநிலைய திறப்புவிழா 14.03.2018 புதன்கிழமை காலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு சிவபாதம் நந்தகுமார் அவர்களும் வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் உயர்திரு நடராசா அனந்தராஜ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.