திங்கள், 27 ஜனவரி, 2014

பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு
யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு மாணவர்களின் ஆங்கில வாசிப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் கொக்குவிலைச் சேர்ந்த திரு சி. செந்தில்செல்வ ன் (BSc Engineering, U.K) அவர்கள் 150 ஆங்கில நூல்களை வித்தியாலய அதிபர் திரு இரா ஸ்ரீநடராசா அவர்களிடம் 27.01.2014 அன்று கையளித்தார்.

மேற்படி நூல்கள் கையளிக்கும் நிகழ்வில் வித்தியாலய நூலக ஆசிரியர் செல்வி செ. செல்வரஞ்சினி மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மேற்படி நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.