வியாழன், 20 அக்டோபர், 2016

நவராத்திரி விழாப் போட்டிகள் - 2016



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு இடையிலான போட்டிகள் நடாத்தப்பட்டன. மாலை கட்டுதல், கோலம் அமைத்தல், தோரணம் கட்டுதல், பண்ணிசை, சமய அறிவுப்போட்டி ஆகியன இவ்வருடமும் நடாத்தப்பட்டன. அவற்றில் இருந்து சில ஒளிப்படங்கள்.






















புதன், 12 அக்டோபர், 2016

2016 புலமைப் பரிசில்



2016 புலமைப் பரிசில் பரீட்சையில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் 7 பேர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர்.
1. செல்வன் கிருபாகரன் அபிநயன் - 178
2. செல்வன் நாகேந்திரன் தருண் - 177
3. செல்வன் ஜெயராஜா காஜாந் - 163
4. செல்வன் கோபாலகிருஸ்ணன் கார்த்திக் - 162
5. விஜயகுமார் விஸ்ணுராஜ் - 155
6. செல்வன் ஆனந்தராஜ் மகிஷன் - 152
7. செல்வி யதுர்ஷிகா இரத்தினகாந்தன் - 152

மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் வாழ்த்துகின்றோம்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

உயர்தர மாணவர் ஒன்றுகூடல் – 2016



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய உயர்தர மாணவர் ஒன்றுகூடல் 16.07.2016 அன்று காலை 9.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் யோ. தயன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு வித்தியாலயத்தின் பழைய மாணவி செல்வி துஷித்தா குலேந்திரன் (பொறியியலாளர் – கொழும்பு) பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் ஆக்கங்கள் அடங்கிய “கலை ஊற்று” (இதழ் – 2) என்ற இதழும் வெளியிடப்பட்டது.






இதழில் உள்ளடங்கியுள்ள மாணவர்களின் ஓவியங்கள் சில..



பதிவும் படங்களும் :சு.குணேஸ்வரன் (ஆசிரியர்)

வியாழன், 16 ஜூன், 2016

ஆராரோ ஆரிவரோ கவிதைநூல் மற்றும் ஒலிப்பேழை அறிமுக நிகழ்ச்சி




ஆசிரியர்வீ . வீரகுமார் (தென்பொலிகை குமாரதீபன்) எழுதிய ஆராரோ ஆரிவரோ கவிதை நூல் மற்றும் உணர்வெழு கானங்கள் ஒலிப்பேழை அறிமுகநிகழ்வு அண்மையில் யா தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலத்தில் அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் அறிமுகவுரையை இ. உதயசங்கர் ( வதிரிவாசன்) அவர்களும், நயப்புரைகளை வேல் ந ந்தகுமார் மற்றும் வே. அகிலன் (அகியோபி) ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் வீ. வீரகுமார் (தென்பொலிகை குமாரதீபன் ) நிகழ்த்தினார்.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
பதிவும் படங்களும் : சு.குணேஸ்வரன்







வெள்ளி, 4 மார்ச், 2016

கரப்பந்தாட்டம் (19 வயது) வடமராட்சி வலய சம்பியன்



வடமராட்சி வலயப்பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டிகள் நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றன. இதில் 19 வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உடுப்பிட்டி அ.மி கல்லூரியும் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயமும் பங்குபற்றின. இதில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை அணி 2016 ஆம் ஆண்டுக்கான வடமராட்சி வலய சம்பியனாகியது.

வியாழன், 3 மார்ச், 2016

சர்வதேச பாடசாலை உணவூட்டல் தினம் - மார்ச் - 03



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் சர்வதேச பாடசாலை உணவூட்டல் தினம் 03.03.2016 வித்தியாலய காலைப்பிரார்த்தனையின்போது இடம்பெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்று கூடல் நிகழ்வில் போது அதிபர் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து பாடசாலை உணவுக்குழு அங்கத்தவர்களில் ஒருவராகிய திரு செ.கணேசலிங்கம் ஆசிரியர் அவர்கள் உலக உணவு வழங்கும் திட்டத்தின் நோக்கம், அதன் பயன்பாடு பற்றி மிகத் தெளிவான கருத்துரை வழங்கினார். தொடர்ந்து உணவுக்குழுப் பொறுப்பாசிரியர் திருமதி அ.ரகு அவர்கள் “பசுமையும் சுகாதாரமும் உள்ளுர் உணர்வுகளை நோக்கி” என்னும் தலைப்பில் உரையாற்றியதோடு இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி (உலக உணவுத்திட்டம்) என் கூயென்டக் ஹோ ஆங் அவர்களின் உரை வாசித்துக் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன. பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன.

மேற்படி நிகழ்வுகளின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்கும் ஏனைய பாடசாலை சமூக அங்கத்தவர்களுக்கும் சர்வதேச பாடசாலை உணவூட்டல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஆரம்பக்கல்வி மாணவர்களின் கண்காட்சி


யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் (முதன்மைநிலை 2) மகிழ்ச்சிகரமான கற்றல் ஆரம்பம் நிகழ்வில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி நிகழ்வு 15.02.2016 அன்று ஆரம்பக்கல்வி வகுப்பறையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகிறோம்.