திங்கள், 28 ஜனவரி, 2019

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வெளியீடுகள்கலை ஊற்று -
உயர்தர மாணவர் மன்ற வெளியீடு 2001


வித்தியாலய நிறுவுநர் வரலாறு -2012

தமிழருவி -
தமிழ்த் தரவட்ட வெளியீடு 2009


90 ஆம் ஆண்டு நிறைவு மலர் - 2002


ஆறு -
நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர் 2012


உப்புமால் சிறுகதைகள் -
நூற்றாண்டு விழாச் சிறுகதைப் போட்டிகளின் தொகுப்புநூல்  2014புதன், 23 ஜனவரி, 2019

போதைக்கு எதிரான பாடசாலையின் பலம்

போதைப்பொருள் தடுப்பு பாடசாலைச் செயற்றிட்டம்

   21.01.2019 முதல் 25.01.2019 வரை நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு 23.01.2019 அன்று காலை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் போதைக்கு எதிரான பாடசாலையின் பலம் என்ற பொருளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு இடம்பெற்றது.
   இந்நிகழ்வில் வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் வருகைதந்து மேற்படி விடயம் தொடர்பாக கருத்துரை மற்றும் அது தொடர்பான காணொலிக் காட்சியின் ஊடாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேற்படி நிகழ்வு வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் வல்வெட்டித்துறை உதவிப் பொலிஸ் பரிசோதகர் எம். ஏ.எஸ். முனசிங்க, பொலிஸ் உத்தியோகத்தர்களாகிய டி. எம். அபேகோன், என். டியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை நிகழ்த்தினர்.
வெள்ளி, 18 ஜனவரி, 2019

வீதியோட்டப் போட்டி (மரதன்)

    யா /தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகளை முன்னிட்டு வீதியோட்டப் போட்டி (மரதன்) 19.01.2019 காலை இடம்பெற்றது. ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தை த.ராஜ்குமார், இரண்டாம் இடத்தை சி. யுவராஜ்,மூன்றாம் இடத்தை அ. தருண்ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பெண்கள் பிரிவில் முதலாம் இடத்தை கா.சயிதா, இரண்டாம் இடத்தை த. தனுசியா, மூன்றாம் இடத்தை வி. சுயிந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய பாடசாலைச் சமூகத்திற்கும் நன்றிகள்.


கால்கோள் விழாவும் பொங்கல் நிகழ்வும்தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய கால்கோள் விழாவும் பொங்கல் நிகழ்வும் 17.01.2019 வியாழக்கிழமை காலை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் திரு பூ. சக்திவேல் அவர்கள் கலந்து சிறப்பித்தார். தரம் 1 இல் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.