திங்கள், 24 ஜூன், 2019

பழக்கடை - சந்தை




தரம் 2 மாணவர்களின் கலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக பழக்கடை சந்தை ஒன்றியை அண்மையில் ஏற்பாடு செய்தனர். சிறுவர்கள் பல்வேறு பழங்களையும் காட்சிக்கு வைத்தனர். ஆசிரியர்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் பழக்கடைச் சந்தையில் பழங்களை வாங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.



துவிச்சக்கரவண்டி அன்பளிப்பு



   ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் (TORONTO BLUES FOUNDATION) அமைப்பினர் அண்மையில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர் ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியை அன்பளிப்புச் செய்தனர். 

   தரம் 11 இல் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர் ஒருவருக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வு 14.06.2019 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ரொன்ரோ புளுஸ் பவுண்டேசனின் வல்வைப் பிரதிநிதி திரு இ.சுரேன், இணைப்பாளர் திரு சி. ஜெயப்பிரதாபன் ஆகியோர் கலந்து கொண்டனர். வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா ரொரன்ரோ புளுஸ் அமைப்பினர் முன்னரும்  ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியமையைப் பாராட்டி அவர்களின் நலன்புரிச் சேவைகளுக்கு நன்றி தெரிவித்தார். 

வியாழன், 13 ஜூன், 2019

மாகாண மட்டப் போட்டிகளில்..


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய கரப்பந்தாட்டப் போட்டிகளில் வடக்கு மாகாண மட்டத்தில் இருந்து தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு  இரண்டு அணிகளுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கடற்கரைக் கரப்பந்தாட்டாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளிலும் பங்குபற்றிய அணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.




செவ்வாய், 4 ஜூன், 2019

சிதம்பரா கணிதப் போட்டி – 2019


சிதம்பரா கணிதப்போட்டியில் பங்குபற்றி பரிசில் பெறத்தகுதியுடைய மாணவர்கள் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தின் 17 மாணவர்கள் பரிசில் பெறவுள்ளனர். கணிதப்போட்டியில் பரிசில் பெறும் மாணவர்களையும் வழிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.
https://chithambaramaths.com/srilanka-results/