சனி, 24 அக்டோபர், 2015

நவராத்திரி விழா நிகழ்வுகள் - 2015தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தின் நவராத்திரி விழா நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதன்போது மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டன. கோலம் அமைத்தல், மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல், பண்ணிசை, சமய அறிவுப் போட்டி ஆகியன இடம்பெற்றன. இறுதிநாள் நிகழ்வில் கலை நிகழ்வுகளும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.


பத்திரிகை நறுக்கு : உதயன், 24.10.2015

நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்கள்.
திங்கள், 12 அக்டோபர், 2015

ஆசிரியர் தினம் - விளையாட்டுப் போட்டி 2015தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை வித்தியாலய மாணவர்கள் ஒழுங்கு செய்தனர். அதிலிருந்து சில ஒளிப்படங்கள்.