திங்கள், 15 ஜூலை, 2019

உயர்தர மாணவர் ஒன்றுகூடல் 2019    யா/தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயம் - உயர்தர மாணவர் மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 13.07.19 அன்று உயர்தர மாணவர் மன்றத் தலைவர் செல்வன் க. யதுசன் தலைமையில் இடம்பெற்றது. 

   மேற்படி நிகழ்வுக்கு வித்தியாலய பழைய மாணவனும் தொண்டைமானாறு கல்வி மேம்பாட்டுக் குழுவின் செயற்பாட்டாளரும் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற அபிவிருத்தி உத்தியோகத்தருமாகிய திரு அருந்தவராசா கிருபாகரன் (B.Sc) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். அதிபரின் வாழ்த்துரை பொறுப்பாசிரியர் உரை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆகியனவும் இடம்பெற்றன.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக