சனி, 8 டிசம்பர், 2012

பிரியாவிடையும் வருடாந்த ஒன்றுகூடலும் 2012
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை வைபவமும் வருடாந்த ஒன்றுகூடலும் 05.12.2012 அன்று வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட மண்டபத்தில் இடம்பெற்றது.

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பின்வரும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றமையிட்டு மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமதி ஜெயராணி ரவீந்திரன், திருமதி ரகு அருந்தவராணி, திருமதி ஜெகதாம்பிகை பரணீதரன், திருமதி ரி. சூரியமலர், திரு க. கிரிதரன், திரு சி. ஜெயச்சந்திரன், திரு ப. தயாளதாசன், செல்வி ம. கீதாஞ்சலி; மற்றும் தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றிய திரு வி. விஜிதரன், திரு ரி.சிறீவர்ணன், திரு ரி. எழில்ரஞ்சன், திரு ஏ. அஜந்தன், செல்வி ஜனனி இராஜதுரை ; கணனி உதவியாளராகப் பணிபுரிந்த செல்வி அ. பிரியதர்சினி ஆகியோர் மேற்படி பிரியாவிடை நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர்.

நிகழ்வில் வரவேற்புரையை திருமதி சுபாசினி சபேசன் அவர்களும் வாழ்த்துரைகளை அதிபர் இரா. சிறீநடராஜா, பிரதி அதிபர் க.யோகராசா, திருமதி யோ. மனோவிஜயா ஆகியோரும் நிகழ்த்தினர். நன்றியுரையை திருமதி வினோதினி பாலேந்திரன் நிகழத்தினார்.

மேற்படி நிகழ்வில் இருந்து ஒருதொகுதி ஒளிப்படங்கள்.


 பதிவு - சு. குணேஸ்வரன் (ஆசிரியர்)
படங்கள் - ரி. சுகுமார் (ஆசிரியர்)

புதன், 10 அக்டோபர், 2012

ஆசிரியர் தினவிழா யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா 05.10.2012 பகல் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வு மாணவர் மன்றத் தலைவி செல்வி சு. அர்ச்சனா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எமது வித்தியாலத்தின் ஓய்வுபெற்ற பிரதிஅதிபர் திரு சி. அழகேந்திரராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

 மாணவர்களின் கலை நிகழ்வுகள், ஆசிரியர்களின் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில படங்கள்.