சனி, 2 நவம்பர், 2019

தேசிய வாசிப்பு மாதம் – போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு


   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு 01.11.2019 அன்று காலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்களின் வாழ்த்துரையைத் தொடந்து “வாசிப்பின் மேன்மை’ என்ற பொருளில் ஆசிரியர் வீ. வீரகுமார் உரை நிகழ்த்தினார். போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.

  அமரர் கமலாதேவி யோகநாதன் ஞாபகார்த்தமாக திரு திருமதி வர்ணகுலசிங்கம் அவர்களின் நிரந்தர நிதியத்திலிருந்து பரிசில்கள் வழங்கப்பட்டன. “வெற்றி பெறுவது எப்படி” என்ற காணொளியும் காண்பிக்கப்பட்டது. இறுதியாக நன்றியுரையை ஆசிரிய நூலகர் திருமதி கெனடி செல்வரஞ்சினி நிகழ்த்தினார். நிகழ்வுகளை ஆசிரியர் மா. செல்வரட்ணம் தொகுத்து வழங்கி நெறிப்படுத்தினார்.


















வெள்ளி, 1 நவம்பர், 2019

ஐக்கிய நாடுகள் தின நிகழ்ச்சி



    ஐக்கிய நாடுகள் தினம் நிகழ்ச்சி வடமராட்சி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் வடமராட்சிப் பாடசாலைகளின் சார்பாக யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் 24.10.2019 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்வில் தலைமையுரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வுக்கு லயன்ஸ் கழகத்தின் மூத்த உறுப்பினர் திரு ஆ. சிவசுவாமி மற்றும் வடமராட்சி லயன்ஸ் கழகத் தலைவரும் அதிபருமாகிய திரு ந. தேவராஜா, செயலாளர் திரு மகிந்தன் ஓய்வுநிலை அதிபர் ஆ. சிவநாதன் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.

    ஐ.நா சபையின் தோற்றப் பின்னணி,வளர்ச்சி, நிர்வாகக் கட்டமைப்பு, உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட முயற்சிகள், தற்காலத்தில் எதிர்கொண்டு வரும் சவால்கள் தொடர்பான சிறப்புரையினை ஓய்வுநிலை அதிபர் லயன் ஆ. சிவநாதன் அவர்கள் நிகழ்த்தினார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக அவ்வுரை அமைந்திருந்தது.

 மேற்படி நிகழ்வின் ஞாபகார்த்தமாக மரநடுகையும் இடம்பெற்றது. மாணவர்களின் தேவைக்காக ஒரு தொகை கற்றல் உபகரணங்களும் பாடசாலைக்கு வடமராட்சி லயன்ஸ் கழகத்தினால் வழங்கப்பட்டது. மேற்படி நிகழ்வை வித்தியாலய அரசறிவியல் பாட ஆசிரியர் திரு ப. காஞ்சன் அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைப்புச் செய்து நெறிப்படுத்தியிருந்தார்.
படங்கள் : ஜனந்தன்