வெள்ளி, 6 ஏப்ரல், 2018

பாண்ட் வாத்தியக் கருவி அன்பளிப்புயா/ தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவைக்கென பாண்ட் வாத்தியக் கருவிகளின் ஒரு தொகுதியினை வித்தியாலய பழைய மாணவன் விஜயரட்ணம் வினோத் (அவுஸ்திரேலியா) வித்தியாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.

குறித்த இந்நிகழ்வில் (06.04.2018) வித்தியாலய அதிபர் பிரதிஅதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் வி. வினோத் சார்பாக அவரது குடும்பத்தினர் பாண்ட் வாத்தியத் தொகுதியை சம்பிரதாய பூர்வமாக வித்தியாலத்தில் கையளித்தனர்.படங்கள் : ரூபரஞ்சன், குணேஸ்.

மாணவர்களுக்கான குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டி அமைத்தல்யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் தேவை கருதி குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டி ஒன்றினை அரசடி தொண்டைமானாற்றைச் சேர்ந்த மறைந்த சின்னத்தம்பி பிள்ளையான் நினைவாக அவரது குடும்பத்தினர் அமைத்துக் கொடுத்தனர்.

வித்தியாலய பழைய மாணவனும் சின்னத்தம்பி பிள்ளையானின் புதல்வனுமாகிய பி. ரதன் (பிரான்ஸ்) தனது தாயாருடன் இணைந்து  குறித்த குடிநீர் ஒழுங்கமைப்புத் தொட்டியினை சம்பிரதாய பூர்வமாக (06.04.2018) கையளித்தனர். இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.


படங்கள் : ரூபரஞ்சன், குணேஸ்.

கல்விச் சாதனையாளர்களை வாழ்த்துகிறோம்
தினக்குரல் 05.06.2018