புதன், 24 மார்ச், 2021

புதிதாக நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழாயா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் வித்தியாலயத்தின் முன்பகுதியில் நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா புதன்கிழமை (24.03.2021) காலை இடம்பெற்றது. சைவஆச்சாரியார்களின் கிரியைகளையடுத்து வித்தியாலய அதிபர் இரா. ஶ்ரீநடராசா அவர்கள் புதிதாக நிறுவப்பட்ட சரஸ்வதி சிலையைத் திறந்து வைத்தார். தொண்டைமானாறு இளைஞர் நற்பணி மன்றத்தினரின் பங்களிப்பில் மேற்படி சிலை நிறுவப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலைச் சமூகம் கலந்து சிறப்பித்தது.