வியாழன், 17 ஜூலை, 2014

ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் 2014



யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் 17.07.2014 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆடிப்பிறப்பு கொண்டாட்ட சிறப்பு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. வித்தியாலய ஆசிரியர் சு. குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா நிகழ்த்தினார். வரவேற்புரையை திருமதி பாமினி வசீகரன் நிகழ்த்தினார்.

நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் “ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை …” என்ற பாடலை மாணவர்கள் கோலாட்டப்பாடலாக நிகழ்த்தினர். மற்றும் பேச்சு, பாடல், குழுப்பாடல், நடனம் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மாணவர்களின் நிகழ்வுகளுடன் ஆசிரியர்கள் பங்குகொண்ட விவாதஅரங்கும் இடம்பெற்றது. “தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு பெரிதும் ஆதாரமாயிருந்தது; அறிவா? ஆரோக்கியமா?”என்ற தலைப்பில் நிகழ்ந்த விவாத அரங்கிற்கு இ. உதயசங்கர்,கு. குகானந்தன் ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர். ஆசிரியர்கள் து. இராமதாஸ், வீ. வீரகுமார், சி. கோமதி, ப.ஜெயவதனி, சு. குணேஸ்வரன், சி. வசந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர். நன்றியுரையை ஆசிரியர் ச. குமரன் நிகழ்த்தினார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்