ஞாயிறு, 12 நவம்பர், 2017

சிறுவர் தினம்


யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு 02.10.2017 அன்று இடம்பெற்றது. வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்  ஆசிரியர்கள், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.இலங்கை வங்கியின் பாடசாலை சேமிப்புப் பிரிவு ஆரம்பிப்பு   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும்முகமாக இலங்கை வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையினர் பாடசாலைச் சேமிப்புப் பிரிவு அலுவலகம் ஒன்றினை (SCHOOL SAVING UNIT) வித்தியாலய வளாகத்தில் 27.10.2017 அன்று திறந்து வைத்தனர்.

   மாணவர்கள் வாரத்தில் ஒருநாள் குறித்த நேரத்தில் தமது கணக்கில் பணத்தினை வைப்புச் செய்து சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் இலங்கை வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கணனி அன்பளிப்புயா|தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திற்கு மாணவர்களின் தேவைக்கென ஒரு மடிக்கணனியை வடக்குமாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் அவர்கள் வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா அவர்களிடம் அண்மையில் வழங்கினார்.

வியாழன், 9 நவம்பர், 2017

வாசிப்பு மாதப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் கண்காட்சியும்தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலயத்தில் (02.11.2017 வியாழன் காலை 8.00) வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நூலகக் கண்காட்சியும் இடம்பெற்றன. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.