புதன், 14 ஜூன், 2017

நிலைபேறான பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டம்   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் தரம் 8,9,10 வகுப்பு மாணவர்களுக்கு 12.06.2017 அன்று ஒரு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம், வீட்டுத்தோட்டம் அமைத்தல், பயன்பாடு பற்றிய மேற்படி கருத்தரங்கினை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலர் திருமதி ப. நகுலேஸ்வரி, விவசாயத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி சி. ஜெகதா ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
படங்கள் : ந. துவாரகன்.ஞாயிறு, 11 ஜூன், 2017

மாணவர்களின் வாசிப்புக்கு ஆங்கில நூல்கள் அன்பளிப்பு


   தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி ஆங்கில நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது, கொக்குவிலைச் சேர்ந்த திரு சி. செந்தில்செல்வன் (BSc Engineering, U.K) அவர்கள் அண்மையில் வித்தியாலய நூலகத்திற்கு வருகைதந்து மாணவர்களுடன் உரையாடியும் அதிபர் மற்றும் நூலகப் பொறுப்பாசிரியருடனும் உரையாடி நூல்களைக் கையளித்து காட்சிப்படுத்தினார்.

   முன்னரும் இவ்வாறு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
பாடசாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பு/2014/

பாதணிகள் அன்பளிப்புயா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு மதவடி, தொண்டைமானாறு அமிர்தலிங்கம் ஜெயரூபனின் பிறந்தநாளை (28.05.2017) முன்னிட்டு, பாதணிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

புதன், 7 ஜூன், 2017

மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்திலிருந்து நான்கு மாணவிகளுக்கு இம்முறை (2016/2017 கல்வியாண்டு) கலைப்பிரிவுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளது.

செல்வி வினோதா விக்கினேஸ்வரன் - மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் (சுவாமி விபுலாந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகம்)
செல்வி லக்மேனகா சிறீபாக்கியராசா - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (இராமநாதன் நுண்கலைக் கல்லூரி)
செல்வி நிலாஜினி பரமநாயகம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (இராமநாதன் நுண்கலைக் கல்லூரி)
செல்வி சங்கீதா ஜெயராசா - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (இராமநாதன் நுண்கலைக் கல்லூரி)
ஆகிய மாணவிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்.
வெற்றியை நோக்கி, கரங்களைக் கோர்த்து இன்னமும் பயணிப்போம்.

வீதி விபத்துக்களைத் தவிர்த்தல் - விழிப்புணர்வுக் கருத்துரைதொண்டைமானாறு வீ. ம. வித்தியாலத்தில் Sond நிறுவனத்தின் ஏற்பாட்டில் வீதி விபத்துக்களைத் தவிர்த்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்துரை இடம்பெற்றது.
நிகழ்வு தொடர்பான ஒளிப்படங்கள் சில.உலக சுற்றாடல் தினம் – கருத்தரங்கு


“மக்களை இயற்கையுடன் ஒன்றிணைத்தல்” என்ற கருப்பொருளில் ஒரு கருத்தரங்கு யா/ தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலயத்தில் 05.06.2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.

தொழில் வழிகாட்டல் ஆலோசனைமாணவர்கள் மத்தியில் தொழில் வழிகாட்டல் ஆலோசனை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஒரு கருத்தரங்கு யா /தொண்டைமானாறு வீ. ம. வித்தியாலயத்தில் 05.06.2017 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்கள் மத்தியில் படித்துமுடித்தபின்னர் தொழில்பெறுதல் தொடர்பான வழிகாட்டலை ஏற்படுத்துவதாக இக்கருத்தரங்கு அமைந்திருந்த்து. யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரி தொழில் வழிகாட்டல் பிரிவைச்சேர்ந்த திரு வே. சபேசன் ( தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்) மற்றும் திரு முரளீதரன் (திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரால் இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்