திங்கள், 20 ஜூலை, 2015

போட்டோபிரதி இயந்திரம் அன்பளிப்பு

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் வித்தியாலய தாபகர் வீரகத்திப்பிள்ளையின் வழித்தோன்றல்களுமாகிய; திருமதி மாலதி பாலச்சந்திரன், திருமதி சுமதி ஆனந்தராஜ், திரு திருஞானசம்பந்தர் முரளிதரன் ஆகியோர் இணைந்து பாடசாலையின் தேவைக்கென புதிய போட்டோபிரதி இயந்திரம் ஒன்றினை அன்பளிப்புச் செய்தனர். வித்தியாலய அதிபர் இரா சிறீநடராஜா அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
அமைதிப்பேரணியில்...
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு அமைதிப்பேரணியில் ஈடுபட்டபோது நிகழ்த்திய அளிக்கையில் இருந்து சில ஒளிப்படங்கள்
புதன், 15 ஜூலை, 2015

இயற்கையோடு இணைந்த வாழ்வு – பிரதிபலிப்புமுறை (Reflexology) சிகிச்சை உரையும் விளக்கமும்
யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் “இயற்கையோடு இணைந்த வாழ்வு – பிரதிபலிப்புமுறை (Reflexology) சிகிச்சை” தொடர்பான உரையும் விளக்கமும் 14.07.2015 செவ்வாய்க்கிழமை காலை வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரபலிப்புமுறை (Reflexology) சிகிச்சை தொடர்பான விளக்கத்தையும் செய்முறை விளக்கத்தினையும் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள் நிகழ்த்தினார்.

வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் குறித்த சிகிச்சை முறை பற்றியும் திருமதி இராஜேஸ்வரி பற்றியும் அறிமுக உரையினை உடுப்பிட்டி மகளிரி கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கன் நிகழ்த்தினார். தொடர்ந்து பிரதிபலிப்புமுறை சிகிச்சை பற்றிய விளக்கத்தினையும் செய்முறையினையும் திருமதி இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து மாணவர்களதும் ஆசிரியர்களதும் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.

படங்களும் பதிவும் : சு. குணேஸ்வரன் 

வெள்ளி, 3 ஜூலை, 2015

கற்றல் உபகரணம் அன்பளிப்பு
     எமது வித்தியாலயத்தின் பழைய மாணவன் திரு த. தர்சனின் தந்தையாரும் ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி தர்சன் தர்சினி அவர்களின் மாமனாருமான அமரத்துவமடைந்த கந்தையா தம்பிரத்தினம் நினைவாக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 55 மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை 03.07.2015 அன்று வழங்கியுள்ளனர்.

நிகழ்வின் இருந்து சில ஒளிப்படங்கள்.