திங்கள், 17 செப்டம்பர், 2018

கல்விச் சுற்றுலா   யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் வடமாகாணத்தின் சில பாகங்களுக்கான கல்விச்சுற்றுலா ஒன்று அண்மையில் 15.09.2018 அன்று இடம்பெற்றது.

சமயபாடத்திற்கான மேலதிக வழிகாட்டியாக அமைந்த மேற்படி சுற்றுலாவில் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம், முள்ளியவளை காட்டா வினாயகர், தண்ணீரூற்றுப் பிள்ளையார், வற்றாப்பளை கண்ணகியம்மன், புளியம்பொக்கணை நாகதம்பிரான் மற்றும் சங்குப்பிட்டிப் பாலம், பூநரிக் கோட்டை, இரணைமடுக்குளம், முல்லைத்தீவு கடற்கரை மற்றும் நினைவாலயம் முதலான பிரசித்தி பெற்ற இடங்களைப் பார்வையிட்டனர்.

(படங்கள் நன்றி : திருமதி செல்வரஞ்சினி கெனடி)


வெள்ளி, 14 செப்டம்பர், 2018

மனைப்பொருளியல் உபகரணங்களுக்கு அன்பளிப்புதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவர்களும் தற்போது கனடாவில் வதிபவர்களுமாகிய திரு திருமதி துஷா ரவீந்திரன் தம்பதியினர் வித்தியாலய மனைப்பொருளியற் கூடத்திற்குத் தேவையான உபகரணக் கொள்வனவிற்கு ஐம்பதினாயிரம் ரூபா பணத்தினை வித்தியாலய அதிபரிடம் அண்மையில் கையளித்தனர். திரு திருமதி துஷா ரவீந்திரன் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பளிப்பு


தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவரும் தற்போது கனடாவில் வதிபவருமான தியாகராசா மணிவண்ணன் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஓகன் வாத்தியக் கருவியினையும் ஒரு தொகுதி மாணவர்களுக்கு பாதணிகளும் அண்மையில் வழங்கியுள்ளார். மணிவண்ணனுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

சைக்கிள்கள் அன்பளிப்புஉடுப்பிட்டி இலக்கணாவத்தையைச் சேர்ந்தவரும் தற்போது கனடாவில் வசிப்பவருமான திரு சண்முகரத்தினம் ரஜிகரன் அவர்கள் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் ஐவருக்கு சைக்கிள்களை அன்பளிப்புச் செய்துள்ளார். மேற்படி நிகழ்வு அண்மையில் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு அவை வழங்கப்பட்டன.

மேற்படி அன்பளிப்புக்களைப் பெறுவதற்கு உதவிய எமது வித்தியாலய ஆசிரியர் திருமதி சுதேஜினி பிரபாகரன் அவர்களுக்கும் அன்பளிப்புக்களை வழங்கிய சண்முகரத்தினம் ரஜிகரன் அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்றையதினம் கெருடாவில் இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் கற்கும் மாணவர்களில் மூவருக்கும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் கற்கும் மாணவர்களில் இருவருக்கும் அன்றையதினம் சைக்கிள்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

தாகசாந்தி நிலையம் 2018   தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த தேர் - தீர்த்தத் திருவிழாக் காலங்களில் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரியர் - ஊழியர் நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட தாகசாந்தி நிலைய ஒளிப்படங்கள் சில.