செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ஞானம் ஞானசேகரனின் அன்பளிப்பு

 


கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இலக்கியச் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் அவர்கள் தமது வெளியீடுகளின் ஒரு தொகுதியை பாடசாலை நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கும் தகவலை அண்மையில் முகநூல் வாயிலாகத் தெரியப்படுத்தியிருந்தார். அவ்வகையில் நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாகக வழங்கியுள்ளார். அந்நூற் தொகுதிகள் ஆசிரியர்களுக்கும்  மாணவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கக்கூடியவை. ஞானம் ஆசிரியர் அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

புதன், 12 ஆகஸ்ட், 2020

திறன் வகுப்பறைத் திறப்புவிழா

 



தொண்
டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் திறன் வகுப்பறைத் (SMART CLASS ROOM) திறப்பு விழா  12.08.2020 புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. தொண்டைமானாறு நற்பணி மன்றத்தின் ஊடாக விடுத்த வேண்டுகோளையடுத்து திருமதி  தேவசிகாமணி தனரத்தினம் அவர்களின் மகன் திரு தே. ஆனந்தக்குமரன் (லண்டன்) அவர்களின் நிதியுதவியில் சாதாரண வகுப்பறையானது திறன் வகுப்பறையாக மாற்றியமைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வு வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு யோ. ரவீந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருமதி தேவசிகாமணி தனரத்தினம் சிறப்பு விருந்தினராகவும் அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர் இணைந்து திறன் வகுப்பறையைச் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.

நிகழ்வில் பாடசாலைச் சமூகத்தினர் கலந்து சிறப்பித்தனர்.





வரவேற்புரை - பிரதி அதிபர் T. இராஜசேகரம் 


தலைமை - வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா 


கெளவர விருந்தினர் உரை - திருமதி தேவசிகாமணி தனரத்தினம்


உரை - தொண்டைமானாறு நற்பணி மன்றத் தலைவர் திரு தெ. சசீந்திரன் 


பிரதம விருந்தினர் உரை - வடமாராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உயர்திரு யோ. ரவீந்திரன் 


நன்றியுரை - பிரதி அதிபர் திரு நா. ரவீந்திரன்