ஞாயிறு, 12 நவம்பர், 2017

இலங்கை வங்கியின் பாடசாலை சேமிப்புப் பிரிவு ஆரம்பிப்பு   யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும்முகமாக இலங்கை வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளையினர் பாடசாலைச் சேமிப்புப் பிரிவு அலுவலகம் ஒன்றினை (SCHOOL SAVING UNIT) வித்தியாலய வளாகத்தில் 27.10.2017 அன்று திறந்து வைத்தனர்.

   மாணவர்கள் வாரத்தில் ஒருநாள் குறித்த நேரத்தில் தமது கணக்கில் பணத்தினை வைப்புச் செய்து சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் இலங்கை வங்கியின் வல்வெட்டித்துறைக் கிளை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக