திங்கள், 22 பிப்ரவரி, 2021

மகிழ்ச்சிகரமான ஆரம்பம்


       யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்பமும் தரம் 3 மாணவர்களின் கற்றல் கண்காட்சியும் 25.01.2021 அன்று வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

    இந்நிகழ்வுக்கு கௌரவ விருந்தினர்களாக வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களாகப் பணியாற்றிய திருமதி வதனி தங்கரூபன் (கெருடாவில் இ.த.க பாடசாலை) திருமதி கோகிலவர்த்தனி செல்வலிங்கம் (கெருடாவில் இ. த.க. பாடசாலை) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் கற்றல் கண்காட்சியும் இடம்பெற்றது. ஆரம்பப் பிரிவு மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

 நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக