திங்கள், 22 பிப்ரவரி, 2021

மாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் அன்பளிப்பு

 யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள்  அன்பளிப்புச் செய்துள்ளார். 

வித்தியாலய மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. நூல்களை வித்தியாலயம் சார்பில் ஆசிரியர்கள் சு.குணேஸ்வரன், துகாரதி ஞானச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 

கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களுக்கு வித்தியாலயம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 


காட்சிப்படுத்தப்பட்ட நூல்களை 
மாணவர்கள் பார்வையிடுகின்றனர். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக