திங்கள், 22 பிப்ரவரி, 2021

கால்கோள் விழாதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில்  தரம் 1 மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து வித்தியாலய மண்டபத்தில் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது. 

வித்தியாலய அதிபரின் வாழ்த்துரையுடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடுகை செய்யப்பட்டன. பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள் 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக