திங்கள், 22 பிப்ரவரி, 2021

சேவை நயப்பு விழா - பிரதி அதிபர் நா. ரவீந்திரன்

     யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகப் பணியாற்றி யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்திற்கு  அதிபராகப் பதவியுயர்வு பெற்றுச் சென்ற திரு நா. ரவீந்திரன் அவர்களுக்கான சேவை நயப்பு விழா கடந்த 16.02.2021 அன்று வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 

     வித்தியாலய ஆசிரியர் - பணியாளர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர் அவர்களைப் பாராட்டி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்துரைகளை நிகழ்த்தினர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வித்தியாலய ஆசிரியர் பணியாளர் நலன்புரிச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோர் மாலையிட்டு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில்களை வழங்கிக் கௌரவித்தனர். மாணவர்களும் மாலையிட்டு அன்பளிப்புகளை வழங்கிச் சிறப்பித்தனர். 

 நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக