திங்கள், 22 அக்டோபர், 2018

ஒலிவாங்கிச் சாதனம் அன்பளிப்பு



   எமது முன்னாள் ஆசிரியர் திருமதி சொர்ணகலா சுபாஸ்கரன் அவர்கள் மாணவர்களின் தேவைக்கென ஒலிவாங்கிச் சாதனத்தை அன்பளிப்பு செய்துள்ளார். மேற்படி அன்பளிப்பை அவரது மகள் செல்வி சு. ரம்மியா அவர்கள் வித்தியாலயத்தில் கையளித்தார். மேற்படி திருமதி சொர்ணகலா சுபாஸ்கரன், செல்வி சு. ரம்மியா ஆகியோருக்கு  எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

நவராத்திரி விழா - 2018



தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய நவராத்திரி விழா 19.10.2018 அன்று இந்துமாமன்றத் தலைவர் -ஆசிரியர் சு.குணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பண்டிதர், ஓய்வுபெற்ற நிலஅளவையாளர் வீ.ஏ தங்கமயில் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினார். நவராத்திரி விழாவையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பரிசில்களுக்கான அனுசரணையை திருமதி கனகரத்தினம் சுவந்திராதேவி (தொண்டைமானாறு) அவர்களும் வித்தியாலய ஆசிரியர் - ஊழியர் நலன்புரிச் சங்கத்தினரும் வழங்கியிருந்தனர். நிகழ்வுகளில் இருந்து சில ஒளிப்படங்கள்..

(ஒளிப்படங்கள் : சு.சிவனேஸ்வரன்)


























வெள்ளி, 12 அக்டோபர், 2018

ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கு அன்பளிப்பு




    ஊரிக்காடு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி வசந்தரூபன் விஜிதா அவர்கள் தனது தாயார் நினைவாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு உடற்பயிற்சிச் சீருடைகளை அண்மையில் அன்பளிப்புச் செய்துள்ளார். திருமதி வசந்தரூபன் விஜிதா அவர்களுக்கு எமது நன்றிகள்.

நவராத்திரி விழா - சின்னக் கைகளின் வண்ணக் குழையல்கள்



தொண்டைமானாறு வீ.ம.வித்தியாலய தரம் 1,2,3 மாணவர்கள்.















தரம் 8 மாணவர்களின் களப்பயணம்



யா -தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்கள் தமது பிரதேசம் தொடர்பான மரபுரிமைச்சின்னங்களைப் பார்வையிடுவதற்கான களப்பயணம் ஒன்றை ஆரம்பித்தனர். அதன் முதற்கட்டமாக கெருடாவிலில் அமைந்திருக்கும் நிலக்கீழ்க் குகையாகிய 'மண்டபம்' மற்றும் அதனைச் சூழ உள்ள சுண்ணக்கற் பாறைகளிலால் ஆன பகுதிகளைப் பார்வையிட்டனர். (12.10.2018)










படங்கள் : சு. சிவனேஸ்வரன்