தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் தரம் 1 மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து வித்தியாலய மண்டபத்தில் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.
வித்தியாலய அதிபரின் வாழ்த்துரையுடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடுகை செய்யப்பட்டன. பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்










































































