வியாழன், 21 ஜனவரி, 2021

"தொகைமதிப்பு ஓவியர் போட்டி"யில் பரிசில் பெற்ற செ. யோகீசனுக்கு வாழ்த்துக்கள்.



யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவன் செல்வன் செ. யோகீசன் (இடைநிலைப் பிரிவு) குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு ஓவியப் போட்டியில் பாராட்டுச் சான்றிதழும் ஊக்குவிப்புப் பணப்பரிசிலும் பெற்றுள்ளார். இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 போட்டியாளர்களில் 9 ஆவது இடத்தை மேற்படி மாணவன் பெற்றுள்ளார். யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மாணவனை நெறிப்படுத்திய சித்திர ஆசிரியர் தெ. சுகுமார் அவர்களுக்கும் போட்டியில் வெற்றிபெற்ற செல்வன் செ. யோகீசனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

இது தொடர்பாக குறித்த திணைக்களத்தினரின் சமூகவலைப் பதிவினையும் இங்கு இணைத்துள்ளோம்.

குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு-2021 -

"தொகைமதிப்பு ஓவியர்" சித்திரப்போட்டி சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு.

இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள

குடிசனம் மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2021 தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்திட்டத்திற்கமைய "தொகைமதிப்பு ஓவியர்".எனும் கருப்பொருளில் தொகைமதிப்பு புள்ளிவிபர திணைக்களத்தினால் தேசிய ரீதியாக சகல பாடசாலை மாணவர்களுக்குமான கனிஷ்ட மற்றும் மேற்பிரிவுகளில் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காக சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு யாழ் மாவட்ட புள்ளிவிபரப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பா.பாலச்சந்திரன் தலைமையில் (19.01.2021 )இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் காசோலைகளை மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் திணைக்கள மக்களியல் பிரிவின் புள்ளிவிபரவியலாளர்

சி. ஜெயவிந்தன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கலந்துகொண்டனர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக