15.09.2021 அன்று சேவையில் இருந்து ஓய்வுபெறும் எமது அதிபர் இரா. சிறீநடராஜா அவர்களைக் கௌரவிக்கும் வகையிலான விழா ஒன்றினை ஏற்பாடு செய்வதற்காக பாடசாலைச் சமூகத்தை உள்ளடக்கிய மணிவிழாக் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
திங்கள், 13 செப்டம்பர், 2021
கண்ணீர் அஞ்சலி
எமது வித்தியாலய ஆசிரியை சாந்தினி விஜயசங்கர் அவர்களின் மறைவு அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தோம். அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
வெள்ளி, 7 மே, 2021
மாணவர்களை வாழ்த்துகின்றோம்
A,2B - ஶ்ரீ. லக்சாயினி
2B,C – செ. மிதுஷாளினி
A,C,S – ர. நக்சாளினி,
A,C,S – ச. இஷாந்திகா
B,C,S – கு. நிஷாந்தினி,
B,C,S – ப. டிலேக்கா
2C,S – ம. கிருசாந்தி,
2C,S – ம. சியானி,
2C,S – நா. நிதுஷா,
2C,S – பா. சோபிகா
C,2S – க. யதுசன்,
C,2S – ப. சுமித்திரா,
C,2S - ஶ்ரீ. ஆரணிகா,
C,2S – சி. யுவராஜ்
புதன், 24 மார்ச், 2021
புதிதாக நிறுவப்பட்ட சரஸ்வதி சிலை திறப்பு விழா
திங்கள், 22 பிப்ரவரி, 2021
மாணவர்களின் வாசிப்புக்கான நூல்கள் அன்பளிப்பு
யா தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளார்.
வித்தியாலய மாணவர்களின் வாசிப்பு ஆற்றலை மேம்படுத்தும் பொருட்டு கதைகள், கட்டுரைகள், கவிதைகள் உள்ளடங்கிய ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. நூல்களை வித்தியாலயம் சார்பில் ஆசிரியர்கள் சு.குணேஸ்வரன், துகாரதி ஞானச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கலாநிதி செல்லத்துரை சுதர்சன் அவர்களுக்கு வித்தியாலயம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
கால்கோள் விழா
தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா அண்மையில் இடம்பெற்றது. நிகழ்வில் தரம் 1 மாணவர்கள் தரம் 2 மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து வித்தியாலய மண்டபத்தில் நிகழ்வு எளிமையாக நடைபெற்றது.
வித்தியாலய அதிபரின் வாழ்த்துரையுடன் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் புதிய மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடுகை செய்யப்பட்டன. பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்



























































