வெள்ளி, 28 ஜூலை, 2017

கணித ஒலிம்பியாட் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றும் மாணவனுக்கு பாராட்டுதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் தரம் 6இல் கல்விபயிலும் செல்வன் நா. தருண் கணித ஒலிம்பியாட் மாகாணமட்டப்போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். மாணவன் தருணை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 28.07.2017 அன்று வித்தியாலய மண்டபத்தில் அதிபர் இரா சிறீநடராசா தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தினர் மாணவன் தருணுக்கு கல்வி ஊக்குவிப்பாக ஒருதொகைப் பணத்தினை அன்பளிப்பாக வழங்கினர்.

அந்நிகழ்வில் தொண்டைமானாறு கல்வி மேம்பாட்டுக் குழுவினரின் சார்பில் மாணவன் நா. தருண் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். திரு த.குமார் அவர்கள் பாராட்டுரை வழங்கினார். திரு த. தர்சன், திரு அ. கிருபாகரன் ஆகியோர் மாணவனுக்கு பதக்கம் அணிவித்து ஒரு தொகை ஊக்குவிப்பு நிதியினை பழைய மாணவர் திரு சி. சுதந்திரதாஸ் சார்பில் வழங்கினர்.

நிகழ்வில் அதிபர் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக