வெள்ளி, 14 ஜூலை, 2017

மாகாண மட்டப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1. வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டு விழாவில் யாழ் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய மாணவி செல்வி அருந்தவராசா சிந்துஜா 12 வயதுப் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 14.8 செக்கன்களில் ஓடி முடித்து வர்ணச்சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார். (Colours)

அத்துடன் இப்போட்டியில் மேலும் இரண்டு பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்கள் தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

2. செல்வன் உதயகுமார் சிந்துஜன் 14 வயதுப் பிரிவினருக்கான உயரம் பாய்தலில் பங்குபற்றி மாகாண மட்டத்தில் நான்காம் நிலைபெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளார். (Colours)

3. பெண்களுக்கான 4 400 மீற்றர் போட்டியில் செல்விகள் நக்சாளினி, கலாஜினி, சாமந்தியா, சதீசனா, லவண்ஜா, ஆகியோர் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடம்பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

4. 800மீற்றர் ஓட்டத்தில் பங்கு பற்றிய வி.சாமந்தியா 5 இடத்தைப் பெற்றுள்ளார்.

5. 100 மீற்றர் ஓட்டத்தில் பங்குபற்றிய செல்வி எல் கலாஜினி ஐந்தாம் இடம்பெற்றுள்ளார்.

6. 12 வயது பெண்களுக்கான 4× 50 மீற்றர் அஞ்சல் ஓட்ட நிகழ்வில் நான்காம் இடம்பெற்றுள்ளனர்.

7. 12 வயது ஆண்களுக்கான 4× 50 மீற்றர் அஞ்சல் ஓட்ட நிகழ்வில் ஆறாம் இடம்பெற்றுள்ளனர். (Colours)

பங்குபற்றிய மாணவர்களுக்கும் அவர்களைப் பயிற்றுவித்த வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்கள் S.வசந்தகுமார், வதனி சுதானந்தன் மற்றும் T.மயூரன் ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்.

(பதிவும் படங்களும் சு.குணேஸ்வரன், ஆசிரியர் தொண்.வீ.ம.வித்) 😀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக