வியாழன், 18 பிப்ரவரி, 2016

ஆரம்பக்கல்வி மாணவர்களின் கண்காட்சி


யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் ஆரம்பக் கல்வி மாணவர்களின் (முதன்மைநிலை 2) மகிழ்ச்சிகரமான கற்றல் ஆரம்பம் நிகழ்வில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மேற்படி நிகழ்வு 15.02.2016 அன்று ஆரம்பக்கல்வி வகுப்பறையில் இடம்பெற்றது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்களைத் தருகிறோம்.






































செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இசைக்கருவி அன்பளிப்பு



    வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய பழைய மாணவன் ந. நிலாவண்ணன், தனது தாயார் திருமதி வசந்தா நடராசா நினைவாக  'பாண்ட்' (Band) வாத்தியக் கருவிகளில் ஒன்றாகிய Bass drums ஒன்றினை அண்மையில் அன்பளிப்புச் செய்தார். அதனை வித்தியாலய அதிபர் இரா சிறீநடராசா அவர்கள்  வாத்தியக் குழுவிற்குப் பொறுப்பான ஆசிரியர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு



   கனடாவாழ் நலன்விரும்பிகள் 01.02.2016 அன்று தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களில் ஒரு தொகுதியினருக்கு கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் 70 மாணவர்களுக்கு சப்பாத்து, புத்தகப்பை மற்றும் எழுதுகருவிகளை வழங்கினர். இந்நிகழ்வு வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இவர்கள் தொடர்ந்தும் மாணவர்களுக்கு உதவிகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.






சனி, 6 பிப்ரவரி, 2016

தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி - 2016



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி 06.02.2016 மாலை 1.30 மணிக்கு நடைபெற்றது. வித்தியாலய அதிபர் திரு இரா சிறீநடராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக நெல்லியடி சம்பத் வங்கி முகாமையாளர் திரு மாக்சன் விஜேந்திரா அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக யாழ் பரியோவான் கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர் திரு இ.இரகுநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திருமதி பயோதரியம்மா இராஜசேகரம் குடும்பத்தினர்; விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை இவ்வருடமும் வழங்கியிருந்தனர். வீரகத்திப்பிள்ளை இல்லம் (நீலம்), சுப்பையா இல்லம் (சிவப்பு), இராசரத்தினம் இல்லம் (பச்சை) ஆகிய இல்லங்களுக்கு இடையிலான போட்டியில் 2016 ஆம் வருடத்திற்கான வெற்றிக்கிண்ணத்தை இராசரத்தினம் இல்லம் (பச்சை)தட்டிக்கொண்டது. மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் ஆகியோரின் பூரண பங்களிப்புடன் மிகச் சிறப்பாக இவ்வருட விளையாட்டுப்போட்டி நடைபெற்று நிறைவுபெற்றது.