வியாழன், 3 மார்ச், 2016

சர்வதேச பாடசாலை உணவூட்டல் தினம் - மார்ச் - 03



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் சர்வதேச பாடசாலை உணவூட்டல் தினம் 03.03.2016 வித்தியாலய காலைப்பிரார்த்தனையின்போது இடம்பெற்றது. பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்று கூடல் நிகழ்வில் போது அதிபர் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து பாடசாலை உணவுக்குழு அங்கத்தவர்களில் ஒருவராகிய திரு செ.கணேசலிங்கம் ஆசிரியர் அவர்கள் உலக உணவு வழங்கும் திட்டத்தின் நோக்கம், அதன் பயன்பாடு பற்றி மிகத் தெளிவான கருத்துரை வழங்கினார். தொடர்ந்து உணவுக்குழுப் பொறுப்பாசிரியர் திருமதி அ.ரகு அவர்கள் “பசுமையும் சுகாதாரமும் உள்ளுர் உணர்வுகளை நோக்கி” என்னும் தலைப்பில் உரையாற்றியதோடு இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி (உலக உணவுத்திட்டம்) என் கூயென்டக் ஹோ ஆங் அவர்களின் உரை வாசித்துக் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன. பயன்தரு மரங்கள் நாட்டப்பட்டன.

மேற்படி நிகழ்வுகளின் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்கும் ஏனைய பாடசாலை சமூக அங்கத்தவர்களுக்கும் சர்வதேச பாடசாலை உணவூட்டல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக