கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச நாடக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த 2014 அரச சிறுவர் நாடக விழா 2014 செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கொழும்பு -07 இல் அமைந்துள்ள நவ ரங்கல மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெற்ற மேற்படி நாடகவிழாவில், தமிழ்மொழிப் பிரிவில் எமது வித்தியாலயத்தில் இருந்து ‘நரிமேளம்’ என்ற நாடகம் செப். 18 ஆந்திகதி நிகழ்த்தப்பட்டது. எமது வித்தியாலய ஆசிரியர் து. ராமதாஸ் அவர்களின் எழுத்துரு மற்றும் நெறியாள்கையில் இடம்பெற்ற இச்சிறுவர் நாடகத்திற்காக விருதுகள் வழங்கும் நிகழ்வு 20.10.2014 அன்று மகரகமவில் அமைந்துள்ள இளைஞர் சேவைகள் மன்ற கலையரங்கில் இடம்பெற்றது.
மேற்படி நாடகம் பின்வரும் 7 பிரிவுகளில் விருதினையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டது.
1. சிறந்த நாடகம் முதலாம் இடத்திற்கான விருது
2. சிறந்த நெறியாள்கைக்கான விருது – து. ராமதாஸ்
3. சிறந்த எழுத்துப்பிரதிக்கான விருது – து. ராமதாஸ்
4. சிறந்த மேடை நிர்வாகத்திற்கான விருது – து. ராமதாஸ்
5. சிறந்த ஒப்பனைக்கான விருது – து. ராமதாஸ்
6. சிறந்த சிறுவர் நடிகருக்கான விருது – செல்வன் சுதாகர சுபாஸ்
7. சிறந்த துணைநடிகருக்கான விருது – செல்வன் வி. லதுர்சன்
மேற்படி நாடகத்தை நெறியாள்கை செய்து மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர் து. ராமதாஸ் அவர்களையும், நாடகத்தில் நடித்த மாணவர்கள் எஸ். சுபாஸ். வி. லதுர்சன், எஸ். வினுஜா, எஸ் அஞ்சனன், ரி.மிதுராஜ், , சு. சுபாஜினி, பி. கிருஷாந், பி.பானுப்பிரியா, ஆர். துனேகா, ஜெ. ஜெயராசா, வி. லதுர்சன், என். திவ்வியா, ரி. தேனுஜா, ஆர். தாரண்யா, பி. சாதுரியா, கே. புவிதா, கே. மதுசனா ஆகியோரையும் துணைநின்ற பக்கவாத்தியக் கலைஞர்களான செல்வன் பிரதாபன், திரு சேதுராஜ் ஆகியோரையும் பின்னணி பாடல் பாடிய மாணவர்கள் செல்விகள் எஸ். றெபேக்கா, வி. வினோதா, ஜெ. சங்கீதா, பி.நிலாஜினி ஆகியோரையும் மற்றும் பல்வேறு விதத்திலும் உதவிய வித்தியாலய ஆசிரியர்கள் திரு சசிகரன், திரு ரகுபதி, செல்வி ராதை வன்னிமரம், செல்வி சிந்துஜாஆகியோரையும் எல்லாவற்றும் துணையாக நின்று வழிப்படுத்திய வித்தியாலய அதிபர் திரு இ. சிறீநடராஜா அவர்களையும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக