சனி, 4 அக்டோபர், 2014

வாணிவிழா 2014



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலம் இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் வாணி விழா நிகழ்வுகள் 03.10.2014 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

விஜயதசமி பூஜை நிகழ்வுகளுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. வாணிவிழாவையொட்டி பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட கோலம் அமைத்தல், மாலை கட்டுதல், தோரணம் கட்டுதல், பண்ணிசை ஆகிய போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேற்படி நிகழ்வு இந்துமாமன்றத் தலைவர் திரு சு. குணேஸ்வரன் தலையில் இடம்பெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை மாணவி கு. தாட்சாயினியும் வாழ்த்துரையை வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா அவர்களும் சிறப்புரையை இ. உதயசங்கர் ஆசிரியர் அவர்களும் நிகழ்த்தினர். நன்றியுரையை மாணவி இ. அஜத்திகா நிகழ்த்தினார்.

மேற்படி வாணிவிழா போட்டிகளுக்கான பரிசில்களுக்கான அன்பளிப்பை வித்தியாலய பழைய மாணவனும் தற்போது சுவிஸில் வசிப்பவருமாகிய திரு கனகரத்தினம் உதயராஜ் அவர்கள் வழங்கியிருந்தார்.

ஆரம்பக்கல்வி மாணவர்களின் ஒரு தொகுதிப் பரிசில்களுக்கான அன்பளிப்பை வித்தியாலய ஆசிரியர் நலன்புரிச் சங்கமும் வழங்கியிருந்தது.

நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளான கவிதை, பாடல், நடனம், நாடகம், விவாத அரங்கு ஆகியன இடம்பெற்றன.


மங்கள விளக்கேற்றல்






அதிபர் வாழ்த்துரை
  
லைமையுரை

சிறப்புரை 
மாணவர் கலை நிகழ்வுகள் 

























சிறுவர்கள் நிகழ்த்திய பட்டிமன்றம்





 நாடகம்



 பரிசில் வழங்குதல்















































 நன்றியுரை

பாடசாலைக்கீதம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக