வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

கு.குகானந்தனின் ‘நிதர்சனம்’ கவிதைநூல் அறிமுக நிகழ்வு



தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் கு. குகானந்தனின் (புத்தூர் கு. குகன்) நிதர்சனம் என்ற கவிதை நூலின் அறிமுகநிகழ்வு வித்தியாலயத்தில் 08.08.2014 பகல் 1.30 மணிக்கு இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார். நூலின் வெளியீட்டுரையை பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த கவிஞரும் பிரதேச செயலருமாகிய த. ஜெயசீலன் நிகழ்த்தினார். கௌரவ விருந்தினர் உரையை வல்வை நகரபிதா ந. அனந்தராஜ் நிகழ்த்தினார். நூலின் மதிப்பீட்டுரையை த. அஜந்தகுமார் நிகழ்த்தினார்.

நூலின் அறிமுகப் பிரதியை த. ஜெயசீலன் அவர்கள் வெளியிட ந. அனந்தராஜ் அவர்கள் பெற்றுக்கொண்டார். ஏற்புரையை நூலாசிரியரும் நன்றியுரையை ஆசிரியர் இ. உதயசங்கரும் நிகழ்த்தினர்.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக